செய்தியால் பதறிய பெண்கள்; திருடிய செல்போன் போலீஸிடம் ஒப்படைப்பு: சின்னத்திரை நடிகர் நன்றி

சின்னத்திரை நடிகர் அழகப்பனிடம் செல்போன் ஒப்படைத்த காவல்துறை
சின்னத்திரை நடிகர் அழகப்பனிடம் செல்போன் ஒப்படைத்த காவல்துறைசெய்தியால் பதறிய பெண்கள்; திருடிய செல்போன் போலீஸிடம் ஒப்படைப்பு: சின்னத்திரை நடிகர் நன்றி

24 மணி நேரத்தில் செல்போனை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார் சின்னத்திரை நடிகர்.

சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த சின்னத்திரை நடிகர் அழகப்பன்(33). வந்தாள் ஸ்ரீதேவி, ஒரு ஊருல ராஜகுமாரி, ஆனந்தராகம் உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இவர், நேற்று முன்தினம் பெரம்பூரில் உள்ள பிரபல துணிக்கடையில் நடைபெற்ற ஆனந்த ராகம் சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அழகப்பன் டேபிள் மேல் வைத்திருந்த செல்போனை கடைக்கு துணி வாங்குவது போல் வந்த இரு பெண்கள் திருடி சென்றனர்.

இது தொடர்பாக நடிகர் அழகப்பன் திருவிக நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து செல்போனை திருடிச்சென்ற இரு பெண்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஊடகங்களில் செல்போனை திருடிய பெண்களின் அடையாளங்களுடன் கூடிய செய்தி வெளியானது. இதனால் பயந்துபோன செல்போனை திருடி சென்ற பெண்கள் காவல்துறையிடம் செல்போனை ஒப்படைத்துவிட்டு மன்னிப்பு கோரியுள்ளனர்.

மேலும் தெரியாமல் எடுத்துவிட்டதாக காவல்துறையினரிடம் பெண்கள் கூறியதாலும், செல்போன் கிடைத்துவிட்டதால் நடவடிக்கை ஏதும் வேண்டாமென சின்னத்திரை நடிகர் அழகப்பன் கேட்டுக்கொண்டதின் பேரில் போலீஸார் இரண்டு பெண்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சின்னத்திரை நடிகர் அழகப்பனிடம் செல்போன் ஒப்படைத்த காவல்துறை
சின்னத்திரை நடிகர் அழகப்பனிடம் செல்போன் ஒப்படைத்த காவல்துறை

புகார் அளித்த 24 மணி நேரத்தில் செல்போனை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து அழகப்பன் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் செல்போன் துரிதமாக மீட்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in