ஒரு நொடி தாமத்திருந்தால் உயிர் பாேய் இருக்கும்: வைரலான பதை பதைக்க வைக்கும் வீடியோ

ஒரு நொடி தாமத்திருந்தால் உயிர் பாேய் இருக்கும்: வைரலான பதை பதைக்க வைக்கும் வீடியோ

தனது குடும்பத்தினருடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தண்டவாளங்களை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு பல பேர் உயிரிழந்து வருகின்றனர். ஹெட்போன்களை காதில் மாட்டிக் கொண்டு தண்டவாளத்தை கடக்கும்போது உயிர்பலிகள் ஏற்படுகின்றன. சென்னையில் அதிகமாக உயிரிழப்பு நடந்து வருகிறது. இதனை தடுக்க ரயில்வே காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் அதை கண்டுகொள்வதே கிடையாது.

அண்மையில், பெண் ஒருவர் தன் பொருட்களை எடுத்துக் கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்னல் வேகத்தில் வந்த ரயிலில் சிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் பிழைத்துள்ளார். இரண்டு வழிப்பாதைகளை கொண்ட தண்டவாளத்தில் சிக்கலுக்காக ரயில் ஒன்று காத்திருக்கிறது. அந்த ரயிலில் இருந்து பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பொருட்களை எடுத்துக் கொண்டு இறங்குகிறார்.

அப்போது, அலாரம் அடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நான்கு பேர் பொருட்களுடன் ஓடி தண்டவாளத்தை கடக்கின்றனர். அதில் ஒரு பெண் மீண்டும் தண்டவாளத்தை கடக்க முயன்றார். மிக அருகில் ரயில் வந்தபோது அந்த பெண் தண்டவாளத்தை கடந்தார். ஒரு நொடி தாமதித்திருந்தால் அந்த பெண் உயிரிழந்திருக்கக் கூடும். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அந்தப் பெண்ணை கண்டித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in