பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளிக்குமாறு மிரட்டுகின்றனர்... மகளிர் ஆணையத்திடம் பெண் பரபரப்பு புகார்!

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளிக்கும்படி எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து.

எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா
எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா

கர்நாடகத்தை உலுக்கும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம், ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரஜ்வலின் மீது பல பெண்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடி விட்டார்.

சிபிஐ
சிபிஐ

இந்த நிலையில் சிபிஐ கோரிக்கையை ஏற்று சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இண்டர்போல் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் பிரஜ்வல் பற்றிய தகவல்களை அளிக்கக் கோரி ப்ளு கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளிக்கும்படி தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய மகளிர் ஆணையம்
தேசிய மகளிர் ஆணையம்

அந்த கடிதத்தில், பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளிக்கும்படி எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சிவில் உடையில் வந்த மூன்று பேர் அழுத்தம் கொடுத்து, இல்லை என்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளனர். எனவே, எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் கடிதத்தில் கூறியுள்ளார். இந்த கடிதம் தொடர்பாக கர்நாடகா காவல் துறைக்கு, கடிதம் எழுதுவோம்ம் என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in