ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும்… பெண் குழந்தை பிறந்தால் அழித்து விடவேண்டும்: மிரட்டல் கணவர் மீது பெண் பகீர் புகார்

ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும்… பெண் குழந்தை பிறந்தால் அழித்து விடவேண்டும்: மிரட்டல் கணவர் மீது பெண் பகீர் புகார்

ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும். பெண் குழந்தை பிறந்தால் அழித்து விட வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததுடன், பெண் குழந்தை பிறந்ததால் வரதட்சணைக் கேட்டு மிரட்டுவதாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார் செய்துள்ளார்.

வில்லிவாக்கம், பாலியம்மன் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சாய் ஸ்ருதி (31). இவர், வடமாநிலத்தில் உள்ள மத்திய அரசின் உள்துறை அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது கணவர் மோகனகிருஷ்ணன். சாய் ஸ்ருதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக வில்லிவாக்கத்தில் உள்ள மோகனகிருஷ்ணன் தாய் வீட்டில் கணவன், மனைவி குழந்தையுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சாய் ஸ்ருதி புகார் ஒன்றை நேற்று அளித்தார்.

அதில் கடந்த 2018-ம் ஆண்டு சுமார் 136 சவரன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணத்தை வரதட்சணையாக பெற்றுக் கொண்டு மோகனகிருஷ்ணன் என்னைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் குழந்தை பிறக்கும் போது, ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும், பெண் குழந்தை பிறந்தால் அழித்து விட வேண்டும். அப்படி பெண் குழந்தை பிறந்ததால் 5 லட்சம் ரூபாய் வரதட்சணை தர வேண்டும் என்று கணவர், அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துகின்றனர் என்று புகாரில் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மோகனகிருஷ்ணன் உள்பட அவர் குடும்பத்தினர் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாய் ஸ்ருதியின் கணவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in