ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்டார்; எரித்துக் கொல்லப்பட்ட கணவன்; நாடகமாடிய மனைவி கள்ளக்காதலனுடன் சிக்கினார்!

கொலை
கொலை

கள்ளக் காதலன் தன் கணவனைக் கொலை செய்ய உடந்தையாக இருந்ததோடு, எதுவுமே நடக்காதது போல் தன் கணவர் மாயமானதாக புகார் கொடுத்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் தென்கலம் குளக்கரையில் கடந்த 20-ம் தேதி இளைஞர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. அது யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு யாரேனும் மாயமாகி இருந்தால் அவர்களைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதில் தாழையூத்து காவல் நிலையத்தில் வினிதா என்னும் பெண் தன் கணவர் ராஜா என்பவரை காணவில்லை என புகார் கொடுத்திருந்தது தெரியவந்தது,

போலீஸார் வினிதாவிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னார். போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்த ராஜா லாரி டிரைவர், தொழில் சரியாகப் போகாததால் குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் குடியேறினார். இங்கு டிரைவராக இருந்துவந்தார். கயத்தாறு அருகே வலசல் பகுதியைச் சேர்ந்த தர்மராஜா(25) ராஜாவோடு அதே வண்டியில் கிளீனராக வேலைசெய்தார். இதில் ராஜா வீட்டுக்கு தர்மராஜா அடிக்கடி வருவார். இதில் தர்மராஜாவுக்கும், ராஜாவின் மனைவி வினிதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதனிடையே தர்மராஜாவும், வினிதாவும் நெருக்கமாக இருந்துள்ளதை ராஜா பார்த்துவிட்டார். இதுதொடர்பாக ராஜாவுக்கும், தர்மராஜாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ராஜாவை தர்மராஜா கொலை செய்தார். உடனே வினிதாவும், தர்மராஜாவும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ராஜாவின் உடலைக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரிந்துவிட்டனர். தொடர்ந்து, வினிதா எதுவுமே நடக்காததுபோல் தன் கணவரைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றிய வினிதா, தர்மராஜாவை போலீஸார் இன்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in