கணவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி: அடித்து உதைத்து துன்புறுத்தியதால் வெறிச்செயல்

ஏழுமலை
ஏழுமலை கணவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி: அடித்து உதைத்து துன்புறுத்தியால் வெறிச்செயல்

குடிபோதையில் அடித்து உதைத்த கணவரை கத்தியால் கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அருகே உள்ள ஓழுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவியை கலைச்செல்வி. இவர் தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குடிப்பழக்கம் உள்ள ஏழுமலை அடிக்கடி வீட்டிற்கு மனைவியிடம் தகராறு செய்து வருவதை வழக்கமாக செய்து வந்துள்ளார்.

இதேபோல் நேற்றும் ஏழுமலை குடித்துவிட்டு மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கலைச்செல்வி கத்தியை எடுத்து கணவரின் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

அப்போது, அடிக்கடி குடித்து வந்து மனைவியை ஏழுமலை துன்புறுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் சம்பவத்தன்று மனைவியை அடித்துள்ளார். அப்போது, தற்காப்புக்காக மனைவி கத்தியை எடுத்து கணவரை குத்திக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, கலைச்செல்வியை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

அடிக்கடி அடித்து துன்புறுத்திய கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் இந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in