`மனைவி கோபமாக இருக்கிறாள்; எனக்கு விடுப்பு வேண்டும்'- டிஎஸ்பிக்கு கடிதம் எழுதிய புதிதாக திருமணமான போலீஸ்காரர்

`மனைவி கோபமாக இருக்கிறாள்; எனக்கு விடுப்பு வேண்டும்'- டிஎஸ்பிக்கு கடிதம் எழுதிய புதிதாக திருமணமான போலீஸ்காரர்

எனது மனைவி கோபமாக இருப்பதால் தனக்கு விடுமுறை வேண்டும் என்று புதிதாக திருமணமான காவலர் எழுதிய விடுப்பு கடிதம் வைரலாகி உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்ரங்கா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்திருக்கிறது. அவர் காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் தனக்கு விடுமுறை கிடைக்காததால் எனது மனைவி கோபத்துடன் இருக்கிறார் என்றும் தான் போன் செய்யும்போது மனைவி தன்னுடன் பேசவில்லை என்றும் பலமுறை மனைவிக்கு போன் செய்ததாகவும் ஆனால் அவர் என்னுடைய தாயிடம் போனை கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது மருமகனின் பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வருவேன் என்று மனைவியிடம் கூறியதாகவும் விடுமுறை தரவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த கடிதத்தை படித்த உதவி கண்காணிப்பாளர் அவருக்கு 10 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மனைவி கோபமாக இருப்பதால் தனக்கு விடுமுறை வேண்டும் என்று காவலர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in