உதவி ஜெயிலர் வீட்டுக்கு தீ வைக்க காரணமான சிறை வார்டன்: அதிர்ச்சி தகவல்

கடலூர் மத்திய சிறைச்சாலை
கடலூர் மத்திய சிறைச்சாலை

கடலூர் மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்தது அந்த சிறையின் வார்டன் செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக இருப்பவர் மணிகண்டன். இவர் சிறை வளாகம் அருகில் உள்ள சிறைக் காவலர்கள் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 28-ம் தேதி அதிகாலை இவரது வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டதால் மணிகண்டன் குடும்பத்தினர் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்த கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸாரின் விசாரணையில் சிறையில் இருக்கும் சென்னை எண்ணூரைச் சேர்ந்த கைதி தனசேகரன் என்பவர் கூலிப்படை மூலமாக இந்த செயலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் தீ வைப்பு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தவர்.

கடலூர் மத்திய சிறை வார்டன் செந்தில்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் என்பவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைக் கைதியின் செல்போனை பறித்ததால் ஆத்திரமடைந்த சிறை கைதிக்கு சிறை வார்டனே உடந்தையாக இருந்திருப்பதும், உதவி ஜெயிலரை குடும்பத்துடன் எரிக்க முயன்றதற்கும் அவர் உடந்தையாக இருந்திருப்பதும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in