`கள்ளங்கபடமில்லாத பிள்ளை'- ராகுல் காந்திக்கு தனது சொத்தை எழுதிவைத்த மூதாட்டி

`கள்ளங்கபடமில்லாத பிள்ளை'- ராகுல் காந்திக்கு தனது சொத்தை எழுதிவைத்த மூதாட்டி

மூதாட்டி ஒருவர் தனது 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதிவைத்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் புஷ்பா உஜ்ஜல். 78 வயதான இவருக்கு தங்க நகைகள் உள்பட 50 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மரணத்துக்கு முன்பே தனது சொத்துகளை நல்லவர்களுக்கு எழுதி வைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அவரது நினைவில் வந்தவர்தான் காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி.

இந்நிலையில், தனது ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை ராகுல் காந்திக்கு எழுதிவைத்துள்ளார் மூதாட்டி புஷ்பா உஜ்ஜல். "ராகுல் காந்தி கள்ளங்கபடமில்லாத மனிதர். நேர்மையாளர். எனவேதான் எனது சொத்துகளை அவருக்கு எழுதித் தருகிறேன். அவற்றை ராகுல் காந்தி தன் விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம். தன்னை எப்போதும் நினைவு கூறும் வகையில் ஏதாவது நடக்க வேண்டும் என்பதால் இதைச் செய்துள்ளேன்" என கூறியுள்ளார் புஷ்பா உஜ்ஜல்.

Related Stories

No stories found.