பைக்கில் வந்த 6 லிட்டர் கள்ளச்சாராயம்: போலீஸை பார்த்ததும் தப்பியோடிய‌ கும்பல் சிக்கியது!

கைது
கைது கைது

திருநெல்வேலி மாவட்டத்தில், போலீஸாரைப் பார்த்ததும் டூவீலர் ஒன்று அவசர, அவசரமாகத் திரும்பியது. அதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் டூவீலரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது 6 லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாங்குநேரி ரயில்வே கேட் அருகில் நாங்குநேரி சார் ஆய்வாளர் இம்மானுவேல் தலைமையிலான போலீஸார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்றுபேர் வந்தனர். அவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் தங்கள் டூவீலரை விட்டுவிட்டு தப்பியோடினர். ஒரே பைக்கில் வந்ததற்காக மூன்றுபேரும் போலீஸாரைப் பார்த்து பயந்ததாக முதலில் நினைத்தனர். ஆனால் பைக்கையே நிறுத்திவிட்டு ஏன் ஓடுகிறார்கள்? என சந்தேகப்பட்டுப் பார்த்தபோது பைக்கில் 6 லிட்டர் கள்ளச் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் துரத்திச் சென்று தப்பி ஓடியதில் இருவரைப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விஜயராயணத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டி(45), ஆண்டார்குளத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி(32), தப்பியோடியது புதுக்குளத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் கள்ளச்சாராயத்தை இவர்களே காய்ச்சினார்களா? அல்லது வேறு யார் மூலமாவது இவர்களுக்குக் கள்ளச்சாராயம் கிடைத்ததா என்பது குறித்துப் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in