ஓடும் ரயிலில் திடீரென புகை... அச்சத்தில் உறைந்த பயணிகள்!

ஓடும் ரயிலில் திடீரென புகை... அச்சத்தில் உறைந்த பயணிகள்!

ஹைதராபாத்தில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் திடீரென புகை வந்ததால் வராங்கல் அடுத்த நெல்கொண்டா ரயில் நிலையம் அருகே பாதுகாப்பு கருதி ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் நின்றதும் பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு கீழே இறங்கினர். இந்த சம்பவத்தினால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பழுதான ரயில் சக்கரத்தின் பகுதியில் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். பழுது சரிசெய்யப்பட்டு ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. ரயில் சக்கர பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in