சுற்றுலாத்தலமானது சிறைச்சாலை: ஒரு நாள் இரவு தங்க 500 ரூபாய் தான்!

சுற்றுலாத்தலமானது சிறைச்சாலை: ஒரு நாள் இரவு தங்க 500 ரூபாய் தான்!

உத்தராகண்ட் மாநிலத்தில் 500 ரூபாய் செலுத்தினால் சிறைச்சாலையில் ஒரு இரவு தங்கலாம் என்ற திட்டத்தை அந்த மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வாணி சிறைச்சாலை 1903-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு பெரும்பாலான பகுதிகள் பயன்பாட்டில் இல்லை. இதன் காரணமாக குப்பைக்கிடங்காக மாறி வருகிறது. இதைப் பார்த்த சிறைத்துறை உதவி கண்காணிப்பாளர் சதீஷ் சுஃஹிஜா மனத்தில் தோன்றியது தான் இந்த சுற்றுலாத்திட்டம்.

தெலங்கானாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சன்ஹாரெட்டி மாவட்ட மத்திய சிறைச்சாலை இதுபோன்று சுற்றுலா மையமாக மாற்றப்பட்டது. இந்த சிறைச்சாலை 220 ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத் நிஜாம் மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த சிறைச்சாலையை அருங்காட்சியகமாக முதலில் மாற்றிய மாநில அரசு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கும் விடுதியாக மாற்றியது.

இதைப் பார்த்த ஹால்த்வாணி சிறைச்சாலையின் உதவி கண்காணிப்பாளர் சதீஷ் சுஃஹிஜா உத்தராகண்டிலும் இந்த திட்டத்தைக் கொண்டு வர யோசித்தார். அம்மாநில அரசின் அனுமதியோடு தற்போது இந்த திட்டம் அங்கு அமலுக்கு வந்துள்ளது. பழமையைக் காக்கும் இந்த திட்டம் சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in