மின்னல் வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில்; தண்டவாளத்தில் நின்ற வாலிபர்: வாணியம்பாடியில் நடந்தது என்ன?

மின்னல் வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில்; தண்டவாளத்தில் நின்ற வாலிபர்: வாணியம்பாடியில் நடந்தது என்ன?

மின்னல் வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று நிறுத்திய சம்பவம் வாணியம்பாடியில் நிகழ்ந்திருக்கிறது.

மங்களூரில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிக் கொண்டிருந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது தண்டவாளத்தின் நடுவே வாலிபர் நின்றுள்ளார். இதனை ரயில் ஓட்டுநர் கவனித்திருக்கிறார். இதையடுத்து ரயிலை குறைந்த வேகத்தில் ஓட்டுநர் இயக்கியுள்ளார். அலாரம் அடித்துக்கொண்டு வந்த ரயில் சத்தத்தை கேட்டு அந்த வாலிபர் தண்டவாளத்திலேயே நின்றிருக்கிறார். இதனால் ரயிலை நிறுத்திவிட்டார் ஓட்டுநர். அப்போது எந்த பகுதியில் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள், அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

பின்னர் அந்த வாலிபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மனநலம் குன்றிய 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை மனநல மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மின்னல் வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை தண்டவாளத்தில் நின்றபடி வாலிபர் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in