காரில் சாய்ந்துநின்ற சிறுவன்; எட்டிமிதித்த வாலிபர்: வைரலாகும் காட்சியால் சிக்கிய வாலிபர்

காரில் சாய்ந்துநின்ற சிறுவன்; எட்டிமிதித்த வாலிபர்: வைரலாகும் காட்சியால் சிக்கிய வாலிபர்

கேரளத்தில் தன் காரில் சாய்ந்து நின்ற சிறுவனை, காரின் உரிமையாளர் காலால் எட்டிமிதிக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையும், குழந்தைகள் பாதுகாப்புக் குழுமமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி பகுதியில் ஒரு திருமண வீட்டிற்கு முகமது ஷிசாந்த் (20) என்ற வாலிபர் காரில் வந்தார். அவர் சாலையில் விதிகளுக்கு மீறாக எதிர்திசையில் காரை நிறுத்திவிட்டுச் சென்றிருந்தார். அவர் திரும்பிவந்து பார்த்தபோது அவரது காரில் ஒரு சிறுவன் சாய்ந்து நின்றார். இதனால் கோபமடைந்த முகமது ஷிசாந்த் அவரைச் சிறுவன் என்றும் பார்க்காமல் நெஞ்சில் எட்டி மிதித்தார். இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள் அந்தப்பகுதியில் இருந்த காவலர்களிடமும் இதுகுறித்துத் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறுவனும் அழுதுகொண்டே சென்றுவிட்டான். ஆனால், அப்பகுதியில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை கொடுத்து அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், சிறுவன் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது. இதையடுத்து கேரள போலீஸார் இதை விசாரிக்கத் தொடங்கினர். இதில், மிதிபட்ட சிறுவனின் பெயர் கணேஷ் என்பதும், ஆறு வயதே ஆவதும் தெரியவந்தது. ராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்ட கணேஷின் குடும்பம் கேரளத்தில் தங்கியிருந்து வேலைசெய்து வருகின்றது. காவல்துறை விசாரணை ஒருபக்கம் இருக்க, இவ்விவகாரத்தை கேரள குழந்தைகள் நலக்குழுமமும் கையில் எடுத்துள்ளது. அதன் தலைவர் கே.வி.மனோஜ்குமார், சிறுவனைத் தாக்கிய முகமது ஷிசாந்த் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அதற்கான நடவடிக்கையை எடுத்துவருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in