வகுப்பறையில் மதுபாட்டில்; போதையில் பாடம் எடுத்த ஆசிரியை: பள்ளிக்கு வந்த அதிகாரிகள் அதிர்ச்சி

வகுப்பறையில் மதுபாட்டில்; போதையில் பாடம் எடுத்த ஆசிரியை: பள்ளிக்கு வந்த அதிகாரிகள் அதிர்ச்சி

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியை பள்ளியில் மது போதையில் இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கியில் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கங்கலக்சம்மா என்ற ஆசிரியை கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக கங்கலக்சம்மா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வருவதுடன், மாணவர்கள், சக ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளார்.

இதனால் இந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அத்துடன் ஆசிரியை கங்கலக்சம்மாவை நேரிலேயே கண்டித்துள்ளனர். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாத கங்கலக்சம்மா, குடியை கைவிடவில்லை.இந்த நிலையில் பள்ளிக்கு பூட்டுப் போட்டு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற போராட்டத்தையும் மாணவர்களின் பெற்றோர் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் ஹனுமா நாயக் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொடக்கப் பள்ளியில் நேரடி ஆய்வை நேற்று நடத்தினார். அப்போது ஆசிரியை கங்கலக்சம்மாவின் மேஜை டிரையரில் மதுபாட்டில்கள் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதன் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in