பொதுப்பாதைக்கும் சேர்ந்து பட்டா; முறையிட வந்தவருக்கு கன்னத்தில் பளார்: தாசில்தார் தாக்கும் காட்சி வைரல்

பொதுப்பாதைக்கும் சேர்ந்து பட்டா; முறையிட வந்தவருக்கு கன்னத்தில் பளார்: தாசில்தார் தாக்கும் காட்சி வைரல்

பொதுப்பாதைக்கும் சேர்த்து பட்டா வழங்கியதாகக் கூறி முறையிட வந்தவரை தாசில்தார் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்கள் வைரலாகி வருகிறது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா(42). இவர் தனது மனைவி லலிதா பெயரில் உள்ள நிலத்தின் ஒரு பகுதியை கடந்த 2014-ம் ஆண்டு செல்வராஜ் என்பவருக்கு விற்பனை செய்தார். அதில் 60 அடி பொது வழியாக இருந்த நிலையில், அதற்கும் சேர்த்து தாசில்தார் அலுவலகத்தில் செல்வராஜ் பட்டா வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக பாரதிராஜா அயனாவரம் தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று தாசில்தாரிடம் பொதுப்பாதைக்கும் சேர்த்து பட்டா வழங்கியது தொடர்பாக நேற்று முறையிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாசில்தார் பாரதி ராஜாவை கன்னத்தில் ஓங்கி அறைந்ததுடன் சரமாரி தாக்கியுள்ளார்..இதில் காயமடைந்த பாரதி ராஜா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் டி.பி சத்திரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது அலுவலகத்திற்கு முறையிட வந்தவரை அயனாவரம் தாசில்தார் தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in