
தமிழக அரசுக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சிலருக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓய்வூதிய விவகாரத்தில் நீதிமன்றம் வரை விவகாரம் வந்து அது நிறைவடைந்து விட்ட பிறகும் மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என அரசு வாதிடுவதை ஏற்க முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், தமிழக அரசுக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
மேலும் அபராத தொகையை 4 வாரத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.