எனது மகள் தற்கொலை செய்யவில்லை; கொலைதான் செய்யப்பட்டாள்: கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை பரபரப்பு பேட்டி

எனது மகள் தற்கொலை செய்யவில்லை; கொலைதான் செய்யப்பட்டாள்: கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை பரபரப்பு பேட்டி

என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலைதான் செய்யப்பட்டாள். அதற்கு காரணம் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த ஏழு பேர் தான் என்று கள்ளிக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரைச் சேர்ந்த ராமலிங்கம் செல்வி தம்பதியின் மகள் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி இரவு அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுமையான சட்ட போராட்டத்திற்கு பின்னர் இன்று மாணவியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தற்கொலை அல்ல

மகளின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்த பின்னர் இடுகாட்டிலேயே மாணவியின் தந்தை ராமலிங்கம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவள் கொலைதான் செய்யப்பட்டாள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அவளது கொலைக்கு பள்ளி நிர்வாகம் தான் முழுக்க முழுக்க காரணம். பள்ளி தாளாளர், அவரது மகன்கள், ஆசிரியர்கள், வார்டன் உள்ளிட்ட ஏழு பேர் தான் அதில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது எங்களது கணிப்பு. அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு தூக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும். என் மகளின் சாவுக்கு நீதி வேண்டும்.

நாங்கள் சட்டரீதியான போராட்டத்தை முடிந்தவரையில் நடத்தியுள்ளோம். இதற்கு மேல் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி விடுதி உரிமம் இல்லாமல் நடத்தியதற்காக எந்த கேள்வியும் இல்லாமல் தற்போதே அவர்களை மூன்றாண்டு சிறையில் தள்ள முடியும். அதையெல்லாம் தமிழக அரசு செய்ய வேண்டும். சிபிசிஐடி விசாரணை நல்ல முறையில் தான் சென்று கொண்டிருக்கிறது. அதில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in