தலையில் சிக்கிய டப்பா; சாப்பாடு, தண்ணீர் உண்ணாமல் தவித்த நாய்; 3 நாட்களுக்கு பின் மீட்பு!

நாயை மீட்டவர்கள்
நாயை மீட்டவர்கள்

கோவை பீளமேடு பகுதியில் தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டிக் கொண்டதால் உணவு உண்ண வழியின்றி சுற்றி திரிந்த நாய் ஒன்றை விலங்குகள் நல தன்னார்வ அமைப்பினர் 3 நாட்களுக்குப் பின் மீட்டனர்.

கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன்மாநகர் குமுதம் நகரில் கடந்த சில நாட்களாக தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டிக்கொண்ட நிலையில் தெரு நாய் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனால் அந்த நாயினால் உணவோ, குடிநீரோ உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தது. அந்த நாயின் நிலையை கண்ட அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நாயின் தலையில் மாட்டிய டப்பாவை எடுக்க முயன்றும் முடியவில்லை.

இந்தநிலையில் இன்று தனியார் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அந்த தெருநாயை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 3 நாட்களாக பசி, தாகத்தினால் சோர்வாக படுத்திருந்த தெருநாயினை குடியிருப்புவாசிகளின் துணையோடு பிடித்த அவர்கள், அதன் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து தெருநாயை காப்பாற்றினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in