மது அருந்த பணம் கொடுக்காததால் ஆத்திரம்: தாயை கொடூரமாக கொன்ற மகன்: விக்கிரவாண்டியில் பயங்கரம்

பாஞ்சாலி, விஜயகுமார்
பாஞ்சாலி, விஜயகுமார்

மது அருந்த பணம் தராத தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கிறார் அவரது குடிகார மகன்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள எஸ்.எஸ்.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஞ்சாலி (65). இவர், தனது மகன் விஜயகுமாருடன் (40) வசித்து வந்திருக்கிறார். கூலித் தொழிலாளியான விஜயகுமார் மது பழக்கத்திற்கு அடிமையானவர். மது அருந்துவதற்கு பணம் இல்லையெனில், தனது தாயிடம் தகராறு செய்து அவரிடமிருக்கும் பணத்தை பிடுங்கிச் சென்று மது அருந்துவாராம்.

அதேபோல நேற்று மாலை பாஞ்சாலியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டு சண்டையிட்டிருக்கிறார். பாஞ்சாலியோ, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தனது தாயை பலமாக தாக்கிதோடு அருகிலிருந்த அம்மி குழவி கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பாஞ்சாலி அந்த இடத்திலேயே இறந்தார். இந்த கொடூர சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீஸார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, விஜயகுமாரை கைது செய்தனர்.

மதுவெறியில் பெற்ற தாயை மகன் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in