டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலி; இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு அதிரடி நீக்கம்!

டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலி; இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு அதிரடி நீக்கம்!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை அதிரடியாக நீக்கியுள்ளது பிசிசிஐ.

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறியது. முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆட்டமும், சூரியகுமாரின் ஆட்டமும் மிகவும் பிரமாதமாக இருந்தது. இதனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சேட்டன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழுவை அதிரடியாக நீக்கியுள்ளது பிசிசிஐ. புதிய தேர்வுக் குழுவை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ள பிசிசிஐ, இதற்கான தேர்வு குழுவின் பொறுப்புக்கள் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் குறித்த விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்படும் குழு டிசம்பர் மாதத்தில் பொறுப்பு ஏற்கும் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in