
பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகளுக்காக நாளை ஒருநாள் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். மலைக்கோயிலுக்கு செல்ல படி பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (டிச.19) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் நாளை ஒரு நாள் மட்டும் படி பாதை, மின் இழுவை ரயில் ஆகியவற்றின் மூலம் மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.