வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையன்: அயர்ந்து உறங்கியதால் காப்பு மாட்டியது காவல்துறை!

வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையன்: அயர்ந்து உறங்கியதால் காப்பு மாட்டியது காவல்துறை!

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்க வந்த இடத்தில் கொள்ளையன் அயர்ந்து உறங்கிய சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் ரத்தினவேல்(50). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் ரத்தினவேலுவின் மனைவி மற்றும் மகள் வெளியூர் சென்றனர்.
இந்த நிலையில் ரத்தினவேல் நேற்று வேலைக்குச் சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது வாலிபர் ஒருவர், வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரத்தினவேல், வாலிபரை உள்ளே வைத்து வீட்டைப்பூட்டினார். இதன் பின் அவனியாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வாலிபரைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.
காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், அவர், மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த நடராஜன்(21) என்பது தெரிய வந்தது. ரத்தினவேல் வீட்டிற்குக் கொள்ளையடிக்க வந்த நடராஜன், அயர்ந்து உறங்கி விட்டதாக கூறினார். அவரை கைது செய்த போலீஸார், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த இடத்தில் கொள்ளையன் அயர்ந்து உறங்கியதால் ரத்தினவேல் வீட்டின் பொருட்கள் தப்பித்ததாக அவனியாபுரம் மக்கள் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in