ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது!

ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் வரை அதிரடியாகக் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

வாரத்தின் முதல் நாளும் 75-வது சுதந்திர தினமுமான நேற்று தங்கத்தின் விலையில் எந்த ஏற்றம், இறக்கமும் இல்லாமல்ரூ.39 ஆயிரத்துக்கு மேல் தொடர்ந்து நீடித்தது. வெள்ளி கிலோ 64,800 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை இன்று சரிவைக் கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 304 குறைந்து 39,008 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ரூ.4,876 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கும் ரூ.1 குறைந்து ஒரு கிராம் 63.80 ரூபாய்க்கும் , கிலோவுக்கு ரூ.1000 குறைந்து 63,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in