திடீரென எகிறிய தங்கத்தின் விலை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

திடீரென எகிறிய தங்கத்தின் விலை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு பவுன் 37,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொண்டனர். இருந்த போதிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்பட்டது. சில வாரங்களாக சவரனுக்கு 10 முதல் 5 ரூபாய் வரை குறைந்து வந்தது தங்கம். தற்போது திடீரென தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதால் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 4,740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் 37 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.70 காசு உயர்ந்து 63 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் திடீரென தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in