ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்தை கடந்தது: கவலையில் நடுத்தர மக்கள்

ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்தை கடந்தது: கவலையில் நடுத்தர மக்கள்

ஆபரண தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்து  43 ஆயிரத்தை  கடந்துள்ளது நடுத்தர மக்களை கவலையடைய வைத்துள்ளது.

நேற்றும் நேற்று முன்தினமும் சற்று  குறைந்து இருந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.  சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை  ரூ.35 உயர்ந்து ரூ.5,380-க்கு விற்கப்படுகிறது. 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில்  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 அதிகரித்து ரூ.75-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை 43 ஆயிரம் கடந்துள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இனி தங்களின் கைகளுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே ஆகிவிடுமோ என்பது அவர்களின் ஆதங்கம். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in