ஆரஞ்சு நிற பாலின் விலை அதிரடி உயர்வு: காரணத்தை சொல்லும் ஆவின் நிறுவனம்

ஆரஞ்சு நிற பாலின் விலை அதிரடி உயர்வு: காரணத்தை சொல்லும் ஆவின் நிறுவனம்

தமிழ்நாட்டில் ஆவினில்  விற்கப்படும்  ஆரஞ்சு நிற நிறை கொழுப்பு பாலின் விலை அதிரடியாக லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.  அதனையடுத்து பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி ஆவின் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு கட்டும் விதமாக நாளை முதல் ஆவினில் விற்கப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலையை அதிரடியாக 12 ரூபாய் ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் ஆவினில் விற்கப்படும் ஆரஞ்சு நிற,   நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் 12 உயர்த்தப்பட்டு 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  தற்போது அரை லிட்டர் 24 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் இந்த பாலின் விலை  நாளை முதல் 6 ரூபாய் உயர்த்தப்பட்டு சில்லறை விற்பனையில் 30 ரூபாயாக  விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் அட்டை வைத்திருக்கும் அட்டைதாரர்களுக்கு இந்த விலை  உயர்வு இல்லாமல் பழைய விலைக்கே  புதுப்பித்து தரப்படும் எனவும், நீலம், பச்சை நிற பால் பால் பாக்கெட் விலையில்  எந்த மாற்றமும்   இல்லை எனவும்  ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in