
கடைகளில் பயன்படுத்தும் வர்த்தக சிலிண்டர் 25 ரூபாய் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தும் வீட்டு எரிவாயு சிலிண்டருக்கான விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
வர்த்தக சிலிண்டர் 19.2 கிலோ எடை கொண்டது. இது இன்று 25 ரூபாய் விலை உயர்ந்து சென்னையில் 1917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அண்மையில் தான் தேநீர் கடைகளில் டீ, காபி விலையை உயர்த்தி இருந்தனர்.
இந்நிலையில் உணவகங்கள், தேநீர் கடைகளில் வணிக ரீதியாக, தொழில்முறையினர் பயன்படுத்தும் வர்த்தக சிலிண்டரின் விலை 25 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவகம் வைத்திருக்கும் நபர் ஒருவர் கூறுகையில், “டீக்கடைகள், உணவகம் நடத்துவோருக்கு வணிகரீதியான சிலிண்டரே அதிகபட்சம் 2, 3 நாள்தான் போகும். இதனால் எரிவாயுவான செலவாகவே மாதம் 500 ரூபாய் கூடுதலாக செலவாகும். இருந்தாலும் அண்மையில் தான் பால் விலை கூடியபோது டீ, காபி விலையைக் கூட்டினோம். அதனால் மீண்டும் விலையை ஏற்ற சாத்தியம் இல்லை. வர்த்தக கியாஸின் விலையை இன்னும் கூட்டாமல் இருந்தால் போதும்.”என்றார்.