8 கோடியைத் தாண்டியது தமிழக மக்கள் தொகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன அட்வைஸ்

8 கோடியைத் தாண்டியது தமிழக மக்கள் தொகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன அட்வைஸ்

தமிழக மக்கள் தொகை 8.04 கோடியாக உயர்ந்துள்ளதாக  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பல் நோக்கு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  "இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியைத் தாண்டியுள்ளது.  தற்போது ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. அதே வேகத்தில் தமிழகத்திலும்  மக்கள் தொகை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. நம் மாநிலத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை  தற்போது 8.04 கோடியாக அதிகரித்து உள்ளது.  

மக்கள் தொகை அதிகரிப்பால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிறது.  அதை கட்டுப்படுத்த 4,000 பேருந்துகளில் கருத்தடை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டாவது குழந்தைக்கான இடைவெளி, மூன்றாண்டுகளாக இருக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in