மகனுக்கு சரியாக முடிவெட்டவில்லை; கோபத்தில் சலூனுக்கு பூட்டுப்போட முயன்ற காவலர்: அதிரடி காட்டிய நெல்லை எஸ்.பி

இடமாற்றம்
இடமாற்றம் மகனுக்கு சரியாக முடிவெட்டவில்லை என சலூனுக்கு பூட்டுப்போட முயன்ற காவலர்! அதிரடி நடவடிக்கை எடுத்த நெல்லை எஸ்.பி

தன் மகனுக்கு சரியாக முடிவெட்டவில்லை என்னும் ஆத்திரத்தில் சலூன் கடைக்குப் பூட்டுப் போட முயன்ற காவலரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை முகாமிற்கு மாற்றி உத்தரவிட்டார்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை காவல்நிலையத்தில் காவலராக இருப்பவர் நேவிஸ் பிரிட்டோ. இவரது மகன் அப்பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றுக்கு முடிவெட்டச் சென்று இருந்தார். சலூன் கடையில் முடிவெட்டிவிட்டு மீண்டும் வீடு திரும்பிய போது முடியை சரிவர வெட்டவில்லை என நேவிஸ் பிரிட்டோ அதிருப்தியாக உணர்ந்தார். உடனே சலூன் கடைக்குத் தன் மனைவி, மகனை அழைத்துப் போனார். ஆனால் தவறுதலாக வேறு சலூன் கடைக்குச் சென்றுவிட்டார். அப்போது சலூன் கடைக்காரர் சாப்பிடப் போயிருந்தார். உடனே கடை வாசலில் இருந்த அவரது செல்போன் எண்ணுக்கு போன் செய்து திட்டத் தொடங்கினார். ஆனால் எதிர்முனையில் பேசியவர் நான் உங்கள் மகனுக்கு முடிவெட்டவில்லை எனச் சொல்லியும் கேட்கவில்லை.

தொடர்ந்து அந்த சலூன் கடையையும் பூட்ட முயன்றார். இதை அப்பகுதிமக்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து இருந்தனர். இந்தநிலையில் இச்சம்பவம் குறித்து சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புகார்கொடுக்க, நேவிஸ் பிரிட்டோ பணிசெய்யும் திசையன்விளை காவல்நிலையத்திலேயே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே இவ்விவகாரத்தில் சலூன் கடைக்குப் பூட்டுபோட முயன்ற நேவிஸ் பிரிட்டோவை ஆயுதப்படை முகாமுக்கு பணிமாற்றி நெல்லை எஸ்.பி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in