சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு... குறட்டை விட்டுத் தூங்கிய ஏட்டு: அதிரடி காட்டிய மாவட்ட எஸ்பி

சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு... குறட்டை விட்டுத் தூங்கிய ஏட்டு: அதிரடி காட்டிய மாவட்ட எஸ்பி

கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனைச் சாவடியில் குறட்டை விட்டுத் தூங்கிய போலீஸ் ஏட்டுவை, மாவட்ட எஸ்.பி அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு ரேசன் பொருள்கள், கனிமவளங்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவற்றைத் தவிர்க்கும்வகையில் மாவட்டம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் இன்று தமிழக -கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் களியக்காவிளை சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டபோது மார்த்தாண்டம் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ஒருவர் தனது கடமையை புறக்கணித்து அஜாக்கிரதையாக சோதனை சாவடிக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை கடுமையாக கண்டித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் சம்பந்தப்பட்ட காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் தங்கள் கடமையை உணர்ந்து பொறுப்பான முறையில் மக்கள் பணியாற்ற வேண்டும். இதனைப் போன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in