கண்ணீர் விட்டு கதறி அழுத போலீஸ்காரர்: வேதனைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம்

கண்ணீர் விட்டு கதறி அழுத போலீஸ்காரர்: வேதனைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம்

சாப்பாட்டை கையில் வைத்துக் கொண்டு காவலர் ஒருவர் கதறி அழும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த காவலர் மனோஜ் குமார் என்பவர் பிரோசாபாத் நகரில் பணியில் ஈடுபட்டு விட்டு காவலர்களுக்கான மெஸ்சில் சாப்பிட வந்துள்ளார். அப்போது, சாப்பாட்டை வாங்கிக் கொண்ட மனோஜ் குமார் திடீரென கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ஏன் அழுகிறீர்கள் என்று சக காவலர்கள் கேட்டபோது, தண்ணீராக உள்ள பருப்பு குழம்பு, வேகாத ரொட்டி எங்களை போன்ற காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து மூத்த காவல் அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 12 மணிநேரம் வேலை பார்த்துவிட்டு வரும் காவலர்கள் இதை சாப்பிடுகின்றனர். இந்த உணவை நாய்கூட சாப்பிடாது. நாங்கள் எப்படி சாப்பிட முடியாது" என்று ஆவேசமாக கூறினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மாநில காவல்துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in