துப்பாக்கி முனையில் துரத்திய போலீஸ்; தப்பிக்க மேம்பாலத்திலிருந்து குதித்த ரவுடி: கை, கால் முறிந்த சோகம்

ரவுடி பிரபா
ரவுடி பிரபாதுப்பாக்கி முனையில் துரத்திய போலீஸ்; தப்பிக்க மேம்பாலத்திலிருந்து குதித்த ரவுடி: கை, கால் முறிந்த சோகம்

காஞ்சிபுரத்தில் துப்பாக்கி முனையில் போலீஸ் பிடிக்க முயன்றதால் ரவுடிகள் மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்பித்த போது கை, கால் முறிவு ஏற்பட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரவுடிகளை பிடித்து வரும் தனிப்படை ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் போலீஸார், பல்வேறு குற்ற குற்றப் பின்னணியில், உள்ள குற்றவாளிகளை தேடிப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பிரபா மற்றும் மண்டேலா. இருவரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை பிடிக்க போலீஸார் திட்டமிட்டு தேடி வந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் மேம்பாலத்தின் அருகே இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்படி அங்குவந்த போலீஸார் அவர்கள் இருவரையும் பிடிக்கும் முயன்றனர். குற்றவாளிகள் போலீஸைப் பார்த்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்  பதிலுக்கு போலீஸார் துப்பாக்கி காட்டி பிடிக்க முயன்றபோது, மேம்பாலத்தில், மேலே இருந்து இருவரும் குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர். இதில் இருவருக்கும் கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த இருவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் போலீஸார் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளை துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்ய முயன்ற போது தப்பிக்க மேம்பாலத்தில் இருந்து குதித்து கை, கால் முறிவு ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in