300 சிசிடிவி காட்சிகள் ஆய்வு; எந்த துப்பும் கிடைக்காமல் திணறல்: பெரம்பூர் கொள்ளையன் படத்தை வெளியிட்டது போலீஸ்

பெரம்பூர் கொள்ளையன் புகைப்படம்
பெரம்பூர் கொள்ளையன் புகைப்படம் 300 சிசிடிவி காட்சிகள் ஆய்வு; எந்த துப்பும் கிடைக்காமல் திணறல்: பெரம்பூர் கொள்ளையன் படத்தை வெளியிட்டது போலீஸ்

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கி்ல் 300 சிசிடிவிக்களை ஆய்வு செய்தும் துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வரும் நிலையில், 17 நாட்களுக்கு பிறகு கொள்ளையன் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் கடந்த 10-ம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வெல்டிங் மிஷினால் ஓட்டைப்போட்டு 9 கிலோ தங்க நகை, 20 லட்சம் மதிப்புள்ள வைரம் ஆகியவற்றை கொள்ளையடித்ததுடன் நகைக்கடையில் இருந்த டி.வி.ஆர் கருவிகளையும் எடுத்து சென்றது. 10 தனிப்படைகள் அமைத்து போலீஸார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரின் பதிவு எண் போலி என்பது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் மங்கி குல்லா அணிந்து நகைக்கடைக்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் வெளியானது. இருப்பினும் கடந்த 17 நாட்களாக கொள்ளையர்கள் குறித்த துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீஸார் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் திருத்தணி அருகே இரு கொள்ளையர்கள் நடந்து செல்வது போன்ற புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பெரம்பூர் நகைக்கடை முதல் ஆந்திரா மாநிலம் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தும் கொள்ளையர்கள் குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கொள்ளையர்களின் அடையாளங்களை வைத்து சித்தூரில் இருந்து சென்னைக்குள் நுழைந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது திருத்தணி அருகே உணவுக் கடையில் கொள்ளையர்கள் நடந்து சென்ற புகைப்படங்கள் போலீஸாரிடம் சிக்கியது. அந்த புகைப்படங்களை வைத்து தனிப்படை போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in