போதை கும்பல் தலைவனுக்கு சிலீப்பர் செல்லாக மாறிய போலீஸ்காரர்; காட்டிக்கொடுத்த செல்போன்

போதை கும்பல் தலைவனுக்கு சிலீப்பர் செல்லாக மாறிய போலீஸ்காரர்; காட்டிக்கொடுத்த செல்போன்
போதை கும்பல் தலைவனுக்கு சிலீப்பர் செல்லாக மாறிய போலீஸ்காரர்; காட்டிக்கொடுத்த செல்போன்

போதை பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த கும்பலுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட போலீஸ்காரரும் அவருக்கு உடந்தையாக இருந்த வக்கீலையும் கோவை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தொடர்பாக சுஜிமோகன் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் தேடி வந்தனர். போலீஸார் தேடுவதை அறிந்த அவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உதவி ஆணையர் கணேசன் தலைமையில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீஸ் டீம் பெங்களூரு சென்று அங்கு பதுங்கியிருந்த சுஜிமோகன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து இவர்களின் செல்போனை ஆய்வு செய்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த அதிர்ச்சிக்கு காரணம், போலீஸாரிடம் சிக்காமல் போதை பொருட்களை எப்படி எங்கு விற்பது மற்றும் போலீஸார் போதை கும்பலை சேர்ந்த யார் யாரை எங்கெல்லாம் தேடுகிறார்கள் என்பன போன்ற வாட்ஸ்அப் ஆடியோ மூலம் போலீஸ்காரர் ஒருவரே பேசியிருந்ததுதான்.

கோவை சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர்தான் அந்த குரலுக்கு சொந்தக்காரர். இவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி கொண்டே போதை பொருள் விற்பனை கும்பலுக்கு சிலீப்பர் செல்லாக செயல்பட்டுள்ளார். இதையடுத்து போலீஸ்காரர் ஸ்ரீதரை நேற்று நள்ளிரவு போலீஸார் கைது செய்தனர்.

மேலும் இந்த கும்பலுக்கு போதைபொருள் விற்பனையில் கிடைக்கும் பணத்தை பங்கு வைத்து கொடுத்த போத்தனூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த வக்கீல் ஆசிக் என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதை பொருள் கும்பல் தலைவன் சுஜிமோகனின் வங்கிக் கணக்கில் இருந்து காவலர் ஸ்ரீதர், வக்கீல் ஆசிக் ஆகியோரது வங்கிக் கணக்கிற்கு 1.60 லட்சம் மாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in