மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ: முகநூலில் பகிர்ந்த துணுக்கு எழுத்தாளர் கைது!

பாலாஜி கணேஷ்
பாலாஜி கணேஷ்

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டவரை போலீஸார்  கைது செய்தனர்.

சிதம்பரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையில் அரசு பள்ளி மாணவிக்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிதம்பரம்  போலீஸார்,  அந்த மாணவன், மாணவி மற்றும்  இருவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து  விசாரணை செய்தனர். 

விசாரணைக்கு பின், எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டு இரு தரப்பினரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதற்காக பிரபல துணுக்கு  எழுத்தாளர் கோவிலாம்பூண்டி பாலாஜி கணேஷ் என்பவரை  போலீஸார்  இன்று அதிகாலை கைது செய்தனர். 

வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில், பாலாஜி கணேஷுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in