சாப்பிட்டுவிட்டு கைகழுவ நின்றவர் பள்ளத்தில் விழுந்து மரணம்: கல்யாண வீட்டில் நடந்த துயரம்

சாப்பிட்டுவிட்டு கைகழுவ நின்றவர் பள்ளத்தில் விழுந்து மரணம்: கல்யாண வீட்டில் நடந்த துயரம்

கல்யாண வீட்டில் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவியவர் திடீரென தரைப்பகுதி இடிந்து விழுந்து நொடிப்பொழுதில் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் ஓட்டலிவிளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான சமூகநலக்கூடம் உள்ளது. நேற்று மாலை இங்கு விருந்து நடந்தது. இதில் சாப்பிட்டவர்கள் கை கழுவ சென்றனர். இந்த விருந்திற்கு வந்திருந்த சுஜிஜா என்பவரும் சாப்பிட்டுவிட்டு கைகழுவினார். தொடர்ந்து கை கழுவும் இடத்தின் அருகே சுஜிஜா நின்று கொண்டிருந்தபோது திடீரென தரைப்பகுதி இடிந்து விழுந்தது. இதில் பள்ளத்திற்குள் விழுந்தவரின் தலை மீது சிமெண்ட் சிலாப்புகள் விழுந்தன.

இந்நிலையில் சுஜிஜாவைக் காப்பாற்ற முயன்ற மேலும் இருவரும் திடீர் பள்ளத்திற்குள் விழுந்தனர். இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் குலசேகரம் தீயணைப்புப் போலீஸார் விரைந்து வந்து மூவரையும் போராடி மீட்டனர். ஆனாலும் சுஜிஜா உயிர் இழந்துவிட்டார். தொடர்ந்து குலசேகரம் போலீஸார் நடத்திய விசாரணையில், “அந்தத் தனியார் சமூகநலக்கூடத்தில் கை கழுவும் பகுதியில் மண்டபக் கழிவுகளை சேகரிக்கும் வகையில் செப்டிக் டேங் அமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த செப்டிக் டேங்கின் மேலே நின்றுதான் சாப்பிட்டுவிட்டுச் செல்பவர்கள் கைகழுவ வேண்டும். கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையினால் அந்த செப்டிக் டேங்க் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்தத் தரைப்பகுதி இடிந்து விழுந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in