ஆன்லைனில் ஆர்டர் செய்தது 81 ஆயிரம் ட்ரோன் கேமரா: பார்சலில் வந்ததோ இருபது ரூபாய் பொம்மை கார்

ஆன்லைனில்  ஆர்டர்  செய்தது  81 ஆயிரம்  ட்ரோன் கேமரா:  பார்சலில் வந்ததோ  இருபது ரூபாய் பொம்மை  கார்

ஆன்லைனில் 81 ஆயிரம் ரூபாய் மதிப்புள் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்த இளைஞருக்கு குழந்தைகள் விளையாடும் பொம்மை கார் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமக்குப் பிடித்த பொருட்களை நமக்குப் பிடித்தமான கடைக்குச் சென்று வாங்கிய காலம் இப்போது மலையேறி விட்டது. கையில் உள்ள செல்போனில் உடை, வீட்டுக்குத்தேவையான மளிகைப்பொருட்கள், பர்னிச்சர், உணவு உள்ளிட்ட எந்த பொருளையும் இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறும் வசதி வந்து விட்டது. ஆனால்,சரியான கம்பெனிகளைத் தேர்வு செய்து பொருட்களை ஆர்டர் செய்யாவிட்டால், மோசடி நடைபெற்று விடும் அபாயம் உள்ளது. அப்படியொரு சம்பவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 81 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிரோன் கேமராவை ஆன்லைனின் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு நேற்று அவர் ஆர்டர் செய்த பொருள் பார்சலில் வந்துள்ளது. அதைப் பிரித்துப் பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார். அவர் ஆர்டர் 81 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ட்ரோன் கேமராவிற்குபப் பதில் குழந்தைகள் விளையாடும் கார் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in