சிறையில் இருந்து வெளியே வந்தவர் சுற்றிவளைப்பு: டீ கடை முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர்

சிறையில் இருந்து வெளியே வந்தவர் சுற்றிவளைப்பு: டீ கடை முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர்

கொலை முயற்சி வழக்கில் சிறையில் இருநத் வெளியே வந்த வாலிபரை ஒரு கும்பல் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட குள்ளகுமார்.
கொலை செய்யப்பட்ட குள்ளகுமார்.

சென்னை நுங்கம்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குள்ளகுமார் என்ற குமார்(22). இவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சாம்பார் என்ற தனசேகரை குள்ள குமார் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குள்ளகுமார் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் தான் இவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரைக் கொலை செய்த சாம்பர் என்ற தனசேகர் காத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை டீ கடைக்கு குள்ளகுமார் வந்தார். அப்போது சம்பார் என்ற தனசேகர், அவரது நண்பர்கள் சங்கு பார்த்திபன், ராஜா ஆகியோருடன் அங்கு வந்தார். குள்ளகுமாரை பட்டாக்கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் குள்ளகுமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு இந்த போலீஸார், குள்ளகுமாரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குள்ளகுமார் நள்ளிரவில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சாம்பார் என்ற தனசேகர் , பார்த்திபன், ராஜா ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in