தண்டவாளத்தில் அடித்து தலைகீழாக தொங்க விடப்பட்ட முதியவர்: பயணியால் சிக்கிய போலீஸ்காரர்!

தண்டவாளத்தில் அடித்து தலைகீழாக தொங்க விடப்பட்ட முதியவர்: பயணியால் சிக்கிய போலீஸ்காரர்!

ஒரு முதியவரை அடித்து உதைத்த போலீஸ்காரர், அவரை பெல்டால் தாக்கி ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்க விட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவரை, போலீஸ்காரர் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து உதைத்துள்ளார். கால்களால் மிதித்தும் கைகளால் குத்தியும் அந்த முதியவரை போலீஸ்காரர் தாக்கினார். மேலும் பெல்டால் தாக்கியதுடன் அந்த முதியவரின் கால்களைப் பிடித்து இழுத்துச் சென்று ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்க விட்டு ரசித்தார். இதை பொதுமக்கள், பயணிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த காட்சிகளை ரயில் பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவக்காட்சிகள், சமூகவலைத்தளங்களில் இன்று வைரலாகியுள்ளது.இதைக் கண்ட மத்தியப் பிரதேச மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு முதியவர் என்றும் பாராமல், அவரை மிருகத்தனமாக போலீஸ்காரர் தாக்கியது காவல்துறை வட்டாரம் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை ஏஎஸ்பி பிரதிமா படேல் கூறுகையில்,“ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவரை போலீஸ்காரர் அனந்த் மிஸ்ரா தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, ​​முதியவரைத் தாக்கிய போலீஸ்காரர் ரேவா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிவது தெரியவந்தது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in