பைக்கை நிறுத்தி ஜூஸ் குடிக்க சென்ற முதியவர்: 1.30 லட்சத்தை திருடிச் சென்ற கொள்ளையன்

பைக்கை நிறுத்தி ஜூஸ் குடிக்க சென்ற முதியவர்: 1.30 லட்சத்தை திருடிச் சென்ற கொள்ளையன்

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் ஜூஸ் குடிக்க சென்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்தை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா கப்பலூர் சொக்கநாதன்பட்டி கிராமம் நடுத்தருவைச் சேர்ந்த கன்னையா மகன் பவுன்ராஜ் (68). இவர் நேற்று காலை திருப்பரங்குன்றம் நகர கூட்டுறவு வங்கியில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார். பின்னர், திருமங்கலம் நோக்கி செல்லும் போது திருநகர் சீதாலட்சுமி மில்கேட் எதிரே உள்ள ஜீஸ் கடையில் ஜூஸ் குடிக்க வாசலில் வண்டியை நிறுத்தியுள்ளார். பவுன்ராஜ், ஜூஸ் குடித்துவிட்டு திரும்பவும் வண்டியில் இருந்த பையில் 1 லட்சத்து 30 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து, பவுன்ராஜ் அளித்த புகாரின் பேரில், திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 60 வயது மதிக்கதக்க ஒருவர் இருசக்கர வண்டியின் பையில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 30 ஆயிரத்தை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார், திருடனை தேடி வருகின்றனர். பணம் திருடு போன சிசிடிவி வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in