வலுப்பெறும் 'சிட்ராங்' புயலால் மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஏற்றப்பட்டது ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வலுப்பெறும் 'சிட்ராங்'  புயலால் மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஏற்றப்பட்டது ஒன்றாம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த குறைந்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக  உருவெடுத்துள்ளது. அது மேலும்  வலுப்பெற்று 'சிட்ராங்' புயலாக  மாறி  தீபாவளிக்கு மறுநாள் வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் வங்கக் கடலில் புயல் உருவாகும் சூழல் உள்ளதை மீனவர்களுக்கு அறிவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், காரைக்கால், புதுச்சேரி   உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in