நீட் விலக்கு மசோதா இதுவரை வரவில்லை: ஆ.ராசா கேள்விக்கு அமைச்சர் பதில்

நீட் விலக்கு மசோதா இதுவரை வரவில்லை: ஆ.ராசா கேள்விக்கு அமைச்சர் பதில்

"தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை" என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை 142 நாட்களுக்கு பிறகு சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர். இந்த நடவடிக்கை தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்நிலையில், 2-வது முறையாக நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அண்மையில் ஆளுநரை சந்தித்து நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஜனாதிபதிக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரைக்கும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மக்களவையில் திமுக எம்பி ஆ.ராசா, நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு வந்ததா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்றார்.

Related Stories

No stories found.