நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை: எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை: எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்  காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று  உருவாகும் நிலையில்  அதன் விளைவாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று  உருவாகிறது.  இது ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கரையை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதன் விளைவாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்  நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை  பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட  டெல்டா மாவட்டங்களிலும்,  புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால்  பல மாவட்டங்களில் ஆரஞ்சு மற்றும்  மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முதலே டெல்டா மாவட்டங்களில்  விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. திருவாரூர்,  மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. மேலும் நாளை முதல் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால்  தங்கள் பயிர்களைப் பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in