டூவீலரில் பின் தொடர்ந்து வந்து இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வாலிபர்: பதைபதைக்க வைக்கும் சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி!

டூவீலரில் பின் தொடர்ந்து வந்து இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வாலிபர்: பதைபதைக்க வைக்கும் சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி!

கேரளத்தில் காவல்துறை ஆய்வாளர் ஆய்வுக்கு சென்றபோது டூவீலரில் பின் தொடர்ந்து வந்த வாலிபர், அவரை வெட்டிக் கொலை செய்ய முயன்றார். ஆனால் காவல் ஆய்வாளர் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்த வாலிபரைக் கைது செய்தார். பதைபதைக்க வைக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தின் நூறுநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருப்பவர் அருண்குமார். இவர், தன் காவல்நிலைய ஆளுகைக்குட்பட்ட காயங்குளம் சாலையில் வழக்கம்போல் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். தன் ஜீப்பில் இவர் வந்து கொண்டிருந்தபோது பின்னாலேயே டூவீலரில் ஒருவர், ஆய்வாளர் அருண்குமாரைப் பின் தொடர்ந்து வந்தார். இதைக் கணித்த அருண்குமார், அவரிடம் இதுகுறித்துக் கேட்க தன் வாகனத்தை விட்டு இறங்கினார்.

அடுத்த நொடியே, தன் டூவீலரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆய்வாளரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் வெட்ட முயன்றார். உடனே மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஆய்வாளர் அருண்குமார், அந்த வாலிபரின் கால்பகுதியைத் தன் காலால் தட்டிவிட்டு அவரைக் கீழே விழச் செய்து, அவர் மேலே ஏறி அழுத்தி, சண்டையிட்டு லாவகமாக அரிவாளைப் பிடுங்கினார்.

இதனிடையே அங்கு பகுதிவாசிகளும் குவிந்தனர். தொடர்ந்து ஆய்வாளரை வெட்ட வந்தவருக்கு தர்ம அடி கொடுத்து, போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். கடந்த 12-ம் தேதி, நடந்த இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in