காவல் துறைக்கு எதிரான மனு: தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல் துறைக்கு எதிரான மனு: தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறு தவறுகளுக்காக காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடும் தமிழக அரசின் முடிவுக்கெதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான சாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்திருந்த மனுவில், 'லாக்கப் மரணம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். 

இந்நிலையில், சிறு தவறுகளுக்காக காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் அரசாணை வெளியிட்டுள்ளது. அவ்வாறு காவல் துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தாகும்.  மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, காவல்துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடும் அரசின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்' என  மனுவில் கோரியிருந்தார்.

அந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பணி தொடர்பான விவகாரங்களில் எவ்வாறு  பொது நல வழக்கு தொடர முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும், விளம்பர நோக்கத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in