வந்தாச்சு குமரி சுற்றுலா பேருந்து: இனி உங்கள் ஊரில் இருந்தே புக் செய்து சுற்றலாம்

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலைவந்தாச்சு குமரி சுற்றுலா பேருந்து: இனி உங்கள் ஊரில் இருந்தே புக் செய்து சுற்றலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களை இணைத்து சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கப்பட உள்ளது. குமரிமாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தும், இந்தப் பேருந்தில் ஏறிக்கொள்ளும் வசதி இதில் புதுமையாக செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இங்கு கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், மும்மூர்த்திகளும் ஒருசேரக் காட்சியளிக்கும் சுசீந்திரம், திற்பரப்பு அருவி என ஏராளமான சுற்றுலா, ஆன்மீகத் தலங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை விடுமுறை காலங்களில் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களை இணைத்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் இவை ரத்தாகிவிட்டது.

இந்நிலையில் இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைத்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மாவட்டத்தின் எந்த ஊரில் இருந்தும், 50 பேர் குழுவாக சேர்ந்து புக் செய்தால் அந்த ஊரில் இருந்தே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்படும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நாகர்கோவில் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், “ஆன்மிக சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா என ஒருநாள் நாள் முழுவதும் குமரிமாவட்டத்தைப் பார்க்கும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி, சுசீந்திரம், பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டில்பாலம், திற்பரப்பு அருவி, பேச்சிப்பாறை அணை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு இந்தப் பேருந்து இயக்கப்படும். 50 பேர் சேர்ந்து புக் செய்தால் குமரிமாவட்டத்தில் எந்த ஊரில் இருந்தும் இந்தப் பேருந்து இயக்கப்படும். இதற்கு முன்பதிவு செய்ய நாகர்கோவில் கிளை மேலாளர் 9487599085 என்ற எண்ணில் புக் செய்யலாம் ”எனக் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் இந்த சுற்றுலா பேருந்து பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in