கேரள புதுமணத் தம்பதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இந்திய ராணுவம்

கேரள புதுமணத் தம்பதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இந்திய ராணுவம்

திருமணப் பத்திரிகை அனுப்பிய கேரள தம்பதிக்கு இந்திய ராணுவம் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதியர் ராகுல் - கார்திகா. இவர்கள் திருமணம் நவ.10-ம் தேதி நடைபெற்றது. அவர்கள் தங்களின் திருமணத்தில் கட்டாயம் கலந்து கொண்டு தங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று இந்திய ராணுவத்திற்கு திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தனர்.

அத்துடன் ஒரு குறிப்பையும் அவர்கள் அனுப்பியிருந்தனர். அதில், " ராணுவத்தினரின், உறுதி, நாட்டுப் பற்றுக்கு நன்றி. எங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். உங்களால் நாங்கள் நிம்மதியாக உறங்குகிறோம். விருப்பமானவர்களுடன் அன்பை பரிமாறிக்கொள்கிறோம். உங்களால் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் முக்கியமான அந்த நாளில் நாங்கள் உங்களின் வருகையும் ஆசிர்வாதத்தையும் எதிர்பார்க்கிறோம்” என்று எழுதியிருந்தனர்.

இந்திய ராணுவம் அந்த அழைப்பிதழை தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “நல்வாழ்த்துக்கள். தங்களின் திருமணத்திற்கு இந்திய ராணுவத்திற்கு அழைப்பு விடுத்தற்கு ராகுல் - கார்த்திகா தம்பதிகளுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள். எப்போதும் இணைந்திருங்கள்” என்று தெரிவித்துள்ளது. இந்தப் பதிவை ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ளனர். மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in