என் மனைவியை வெட்டிக் கொன்று விட்டேன்: காவல் நிலையத்தில் சரணடைந்த டிராக்டர் டிரைவர்

என் மனைவியை வெட்டிக் கொன்று விட்டேன்: காவல் நிலையத்தில் சரணடைந்த டிராக்டர் டிரைவர்

நாமக்கல் அருகே தனியார் பள்ளி ஆசிரியையான தனது மனைவியைக்  கொலை செய்த கணவர் நாமக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

நாமக்கல் அருகே தூசூரைச் சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் ராஜா (42). இவரது மனைவி பிரமிளா(32) நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவர் ராஜா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இச்சூழலில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜா  அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரமிளா  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனிடையே மனைவியைக் கொலை செய்த கணவர் ராஜா நேராக  நாமக்கல் காவல் நிலையத்திற்கு சென்றவர், தனது மனைவியை வெட்டிக்கொலை செய்து விட்டதாக சரணடைந்தார். 

அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வரும் போலீஸார், பிரமிளாவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆசிரியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in