ஆடம்பரமாக வாழ நினைத்த மனைவியைக் கொலை செய்தேன்: உடலை சூட்கேஸில் அடைத்து தெருவில் வீசிய கணவன் வாக்குமூலம்

ஆடம்பரமாக வாழ நினைத்த மனைவியைக் கொலை செய்தேன்: உடலை சூட்கேஸில் அடைத்து தெருவில் வீசிய கணவன் வாக்குமூலம்

ஆடம்பரமாக வாழ நினைத்த மனைவியை அடித்துக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து தெருவில் வீசினேன் என்று கைது செய்யப்பட்ட வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் குருகிராம் அருகே உள்ள சவுக் பகுதியில் அக்.17-ம் தேதி சாலையில் ஒரு சூட்கேஸ் கிடந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் , அந்த சூட்கேஸைத் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.

அதில், நிர்வாண நிலையில் இளம் பெண்ணிண் உடல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், அப்பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு ஆட்டோவில் வந்து நபர் அந்த சூட்கேஸை வைத்து விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் அந்த ஆட்டோவைத் தேடிப்பிடித்தனர்.

ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய போது, சர்ஹவுல் கிராமத்தில் இருந்த ஒரு வாலிபர் சூட்கேஸ்சுடன் சவாரிக்கு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து சர்ஹவுல் கிராமத்திற்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியானது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூரைச் சேர்ந்த ராகுல்(22) என்பவர் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் சர்ஹவுல் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா(20) என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. ராகுல் சம்பளம் வாழ்க்கை நடத்தவே போதுமான நிலையில் இல்லாத போது, பிரியங்கா கணவரிடம் செல்போன், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் வேண்டும் என்று அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை அடிதடியாக மாறியுள்ளது. அப்போது ராகுல் தனது மனைவி பிரியங்காவை அடித்துக் கொலை செய்துள்ளார். இரவு முழுக்க மனைவியின் பிணத்தை வீட்டில் வைத்திருந்த ராகுல், அடுத்த நாள் கடைக்குச் சென்று பெரிய சூட்கேஸ் வாங்கி அதில் உடைகளைக் கலைந்து நிர்வாண நிலையில் பிரியங்காவை உடலை அடைத்துள்ளார். அத்துடன் மனைவியின் கையில் பச்சை குத்தியிருந்த தனது பெயரை கத்தியால் கிழித்து நீக்கியுள்ளார். இதன் பின் சூட்கேஸை ஆட்டோவில் ஏற்றி சவுக் பகுதியில் போட்டு விட்டுச்சென்றுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை நேற்று கைது செய்துள்ளோம்" என்றனர். மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து தெருவில் வீசிய கணவனின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in